என் அம்மாவும் இறந்தாள்
நான்
இறந்ததும்....
மனைவி
துணை இல்லையென்று
துன்பபட்டாள்......
நண்பன்
ஒரு கை
இழந்தது போல்
எண்ணினான்.......
தோழி
இணைய தளத்தில்
செய்தியை
பகிர்ந்து கொண்டிருந்தாள்......
ஆனால்
என் அம்மா
மட்டும்
எதுவும் பேசவில்லை.......
காரணம்
நான் இறந்த செய்தி
கேட்டதும்
அம்மாவும்
இறந்துவிட்டாள்...........!