உணர வைக்கும் கவிதை

.*
எதற்காக சட்டென
நீ கோபித்துக் கொள்கிறாய்?
கோபித்துக் கொள்வது
தவறில்லை.
கோபம் மனஇறுக்கத்தைக்
கொடுக்கும் நோய்.
கோபத்திற்கு மாமருந்து
மௌனம்.
மௌனத்திற்குப் பிறகான
உன் முகம் சூரியகாந்தியாய்
பிரகாசிக்கிறது
கோபம் பனிப்போல் மறைந்து
உன்னை உணர வைக்கும்
உன்னுள்
புதிய சிந்தனைப் பிறக்கும்.
புரிந்துக் கொள்.
புரிந்து இணைய வைப்பதே
காதல்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (20-Sep-14, 6:31 pm)
பார்வை : 107

மேலே