பொக்கிஷம் எனக்கு
தித்திக்கும் உனது எச்சில்
என்மீது படும்போது
திகட்டாத உன் புன்னகை
எப்போதும் என் விழிகளுக்கு
விருந்து பாதத்தின் சலங்கை
ஒலி இன்ப கீதம் எனக்கு
பார்த்து பார்த்து அழுத
வாழ்வில் பாசம்காட்ட
வந்த பந்தம் நீ பத்து
மாத தவத்தில் கிடைத்த
பொக்கிஷம் எனக்கு
அன்னை என்ற பட்டம்
உன்னாலே அகமகிழ
அழகிய இளந்தளிரே...