மழைத்துளி

உன் விழிகளை பார்த்து
கூறவேண்டிய என் வலிகளை,
விண்ணைப்பார்த்து கூறிவிட்டேன் !
உன் விழியிலிருந்து பெற நினைத்த
கண்ணீர் துளிகளை ,
விண்ணிலிருந்து மழைத்துளியாக
பெற்றுவிட்டேன் !
விண்ணின் மழைத்துளி,
என்னில் உயிர்த்துளியை
நனைத்துவிட்டது !