சாகும் - தமிழும் தமிழனும்

தமிழ் இனி
மெல்லச் சாகும்
என்று பாடினான்
பாரதி - யாரும்
சொல்லவில்லையே
தமிழனும் இனி
மெல்லச் சாவான்
என்று?


இறப்பிற்கு பின்
எழுதிடுங்கள் - எங்கள்
கல்லறையில்

இதற்கு காரணம்
எங்கள் தாய்மொழி
என்று!!

சட்டை இல்லாதோர்
என நினைத்த
சட்டத்தை நோக்கி
விரைவில் சாட்டை
சுழலும்

மாண்டு விழுவார்கள்
மனிதநேயம் அற்ற
அரக்கர்கள்

******பயமறியான்******

எழுதியவர் : பயமறியான் (21-Sep-14, 7:01 pm)
சேர்த்தது : பயமறியான்
பார்வை : 115

மேலே