இவை எல்லாம் உன்னாலே
ஒரு கனவை சொல்கிறேன்
கவிதையே கேளடி....
உறக்கம் தொலைக்கின்றேன்
உன்னால் நானடி
கனவுக்கு உருவம் வந்தால்
காற்றுக்கு வடிவம் தந்தால்
மெதுவாய் பூ நடந்தால்
பனித்துளி கர்வம் கொண்டால்
உன் நியாபகமே --என்
கனவில் உலாவருமே
கனவை கனவா என
என் மனம் கேட்டிடுமே
இவை எல்லாம் உன்னாலே