தூண்டில்கள் பலவிதம்

..."" தூண்டில்கள் பலவிதம் ""...

தூண்டிலில் இரைகோர்த்து தன்
இரைதேடல் மீன்பிடிப்பில்,,
தூண்டிலில் இரையாக்கி நாமே
துடிப்பது காதலின் தீண்டல்,,
கவர்ச்சியாய் அலங்கரித்து காட்சி
தருவது வியாபர கூட்டல்,,
கடைக்கண் மொழிபேசும் இளம்
கன்னியரின் மீட்டல்,,,
ஆசையாய் சொல்லெடுத்து அழகாய்
வசீகரிக்கும் ஆடவர் சீண்டல்,,

வாசனைதடவி வார்த்தை மணக்க
விலைமகளின் தூண்டல்,,
வாழ்வில்சேர வசதியாகவே சீதனம்
விலைமகனின் சாடல்,,
கணவனை பிரித்து கைக்குள்ளடக்க
மனைவியின் நெருடல்,,,,
மருமகளை தன் பிடிக்குள் மடக்க
மாமியாரின் திட்டல்,,
பிடிததுமுதல் பிடிக்காததுவரை பல
நிற,குணத்தில் தூண்டில்கள்,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (23-Sep-14, 4:03 am)
பார்வை : 165

மேலே