சிதம்பரப் பாட்டியல் -ஆசிரியப்பா பற்றி

==== சிதம்பரப் பாட்டியல் கூறும் இலக்கணம் ======

அகவலோசையும் அளவடியையும் உடைத்தாய் ஈற்றயலடி முச்சீராய் வருவது நேரிசையாசிரியப்பா;

“எவ்வடியும் அளவொத்தல் அருநிலை மண்டிலம்”
எ(ன்ப)து ,எல்லாவடியும் தம்முள் ஒத்து முடிவது நிலைமண்டில வாசிரியப்பா;

“இடைச்சீர்குன்றல் இணைக்குறளாம்”
எ-து ; இடையிடையே இருசீரடியானும் முச்சீரடியானும் வருவது, இணைக்குறளாசிரியப்பா“;

ஆதி, நடு, அந்தமுறின் அடிமறிமண்டில வாசிரியம்” எ-து, எல்லாவடியும் முதனடு விறுதியாக உச்சரித்தாலும் பொருள் ஒத்து முடிவது அடிமறி மண்டில வாசிரியப்பாவாம்;

“மூன்றடியொத்தல் தாழிசை”
எ-து : மூன்றடியுந் தம்முள் ஒத்து வருவது ஆசிரியத்தாழிசை;

“நான்கடியாய்ச் சீரிடை குறைதல் இடைமடக்கல் ஈற்றயலின் மருவடி நைவது துறை”
எ-து: நான்கடியா யிடையிடை சீர்குறைந்தும் இடைமடக்கியும் ஈற்றயலடி குறைந்தும் வருவது ஆசிரியத்துறை;

“நான்கடியொத்து ஆறு ஆதி வளர்சீர்கள் பலவருதல் ஆசிரியவிருத்தம்”
எ-து : நான்கடியும் தம்முள் ஒத்து அடிகடோறும் அறுசீர்முதலான சீரையுடைத்தாய்வருவது ஆசிரியவிருத்தம்.
======= ========== ===============
ஆர்வலர்கள் படியெடுத்து அறிந்து கொள்க..

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (சி (23-Sep-14, 11:15 am)
பார்வை : 171

சிறந்த கட்டுரைகள்

மேலே