என் இதயத்தின் இறுதி துடிப்பு உனக்காக 555
பிரியமானவளே...
நீ என்னை
நினைக்காத பொழுது...
என் கண்களில்
உன்னை கண்டேன்...
உன்னை நான் காணாத
நாட்களில்...
உன் பாத சுவடுகளில்
உன்னை கண்டேன்...
உறவுகள் நம்
உள்ளங்களை பிரித்தாளும்...
உன் பார்வை
எனக்கு வேண்டுமடி...
இன்று நீயே என்னை
வெறுத்து செல்லும் போது...
அந்த பார்வையே
என்னை கொல்லுதடி...
நான் செய்த
தவறினை சொல்லடி...
உன் விரல் பிடித்து
நான் நடந்த போது...
உன் பாதம் தொட்டு மெட்டியிட
வேண்டுமென்றாய்...
உன் பாதம் பட்ட
தடத்தினையும்...
உன்னுடனே அழைத்து
செல்கிறாயடி...
நான் உன்னை தொடர்ந்து
வருவேன் என்றா...
நீ காற்றாக சென்றாலும்...
நானும் உன்னை காற்றாக
தொடர்ந்து வருவேனடி...
எது வேண்டுமோ
எடுத்து கொள்ளடி...
என்னிடம் இருந்து
உன்னை தவிர...
வடிக்கின்ற கண்ணீரின்
முதல் துளியும்...
துடிக்கின்ற என் இதயத்தின்
கடைசி துடிப்பும்...
நீ என்னை
நீக்கினாள் மட்டுமே.....