தியாகதீபம் திலீபன்
எவனடா சொன்னது- தமிழனுக்கு
ஆயுதப் புரட்சியிலே ஆர்வம் என்று...
நாங்களும் தொடங்கினோம்- அகிம்சையில்.
உண்ணாநிலை வாயிலாய்....
இனத்தின் நிலை புரியவைத்தான்....
பன்னிரு நாட்கள் அவனது #பட்டினி #நெருப்பு,
பற்ற வைத்தது- எம் இனப்பற்றை....
உறங்க மறுத்த உனது கண்களால் மூட்டினாய்-
விடுதலை வேள்விக்கு கனலை...
அரச பயங்கரவாதம் மிதித்துப் போட்ட உரிமையை-
மீட்டெடுக்கச் சொன்னாய்...
மலர வேண்டினாய்- ஈழம்...
வந்தான் - நம் தலைவன்...
இலக்கை நோக்கி நடந்தான்- ஆனால் வேறு பாதையில்...
ஆயுதம் தேவை என்ற அவனது பார்வை- தேவையாய் இருந்தது..
அவன் உணர்ந்திருந்தான்- பெயர் தான் வேறு வேறு...
ஜெயவர்த்தனே, சந்திரிகா, ராஜ பக்சே என்று...
உள்ளத்தால் அத்தனையும், காட்டேரி நரிகள் என்று...
புத்தன் பிறந்த பூமியும், புத்தனைப் போற்றிய பூமியும்-
சேர்ந்து சமைத்தது- #கூட்டான்சோறு
நம் இனத்தின் #பிள்ளைக்கறியால்...
நம் இனத்தின் #ரத்தம்- ஈனர்களின் #மதுக் குவளையில்...
இருபத்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும்-
காட்சிகள் மாறவில்லை...கண்ணீர் தீரவில்லை...
"விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை என்றாய்"
#கண்ணெதிரே தெரிவதெல்லாம் காட்சிப் பிழைகள் மட்டுமே....
ஆனாலும் தியாகச் செம்மலே....
வருவான் #மீண்டும் #வருவான் #நம் #தலைவன்
நீ ஏற்றிய தீபத்தில், ஈழம் காட்டுவான்...
நாடற்ற நாதியற்ற கூட்டத்திற்கு வைகறை வரும் அன்று...