தமிழர்கள் வாழ்வில் உடனடித் தேவை பகுத்தறிவே கவிஞர் இரா இரவி

மருத்துவர் யோகநாதன் தொகுப்பு நூலிற்காக தந்த தலைப்பு !

தமிழர்கள் வாழ்வில் வீரமா ? கல்வியா ? செல்வமா ?

தமிழர்கள் வாழ்வில் உடனடித் தேவை பகுத்தறிவே !

கவிஞர் இரா .இரவி !

தமிழர்கள் வாழ்வில் உடனடித் தேவை பகுத்தறிவே !
தமிழர்களிடம் இன்றைய அவசரத் தேவை பகுத்தறிவே !

மூட நம்பிக்கைகளில் மூழ்கித் தவிக்கின்றனர் !
முட்டாளை விட மிக மோசமாக நடக்கின்றனர் !

சோதிடம் பார்த்து சோகம் கொள்கின்றனர் !
சோதனை வந்தால் சோர்ந்து விடுகின்றனர் !

பிராத்தனையிலேயே காலம் கழிக்கின்றனர் !
பிராந்தி குடித்து வாழ்நாளைக் குறைக்கின்றனர் !

ராசிக்கல் மோதிரத்திற்கு செலவு செய்கின்றனர் !
ராசிக்கல் அணிந்தே விபத்தும் அடைகின்றனர் !


ராசிபலன் பார்த்து வாழ்க்கை நடத்துகின்றனர் !
வாஷ்துபலன் பார்த்து வளத்தை இழக்கின்றனர் !

அறிவியல் இமயம் அப்துல் கலாம் சொன்னார் !
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள கிரகம் ஒன்றும் செய்யாது !

எனக்கு கடவுள் நம்பிக்கை என்றுமுண்டு ஆனால் !
எங்கோ இருக்கும் கிரகத்தின்ஆதிக்கத்தில் நம்பிக்கையில்லை !

எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எங்கு ?எதனால் ?கேட்டுப் பழகு !
எம் பெரியாரின் வழி பகுத்தறிவைப் பயன்படுத்திடு !

ஒருபக்கம் பக்தி பரவசம் பெருகுது நாட்டில் !
மறுபக்கம் கொலை கொள்ளை நடக்குது !

சாத்திரம் சம்பிரதாயம் பார்ப்பது குறையவில்லை !
சந்தோசம் மகிழ்ச்சியின்றி தவிப்பில் வாழ்கின்றனர் !

தமிழர்கள் வாழ்வில் பகுத்தறிவிற்கு வந்தது பற்றாக்குறை !
தமிழர்கள் வாழ்வில் வரட்டும் பகுத்தறிவுக்கு நிறை !

--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Sep-14, 8:07 pm)
பார்வை : 69

மேலே