அழகான தலைப்பு
ஆதியில் அவன் ஆள
அவனியில் இவள் ஆள
ஆதரிக்கப்பட்ட தலைப்பு
முள்ளி வாய்க்காலில்
எள்ளி நகையாடப்பட்ட
அநியாய தலைப்பு
வஞ்சிக்கப்பட்ட ஆண்களின்
வேதனைக்குரிய பக்கங்களில்
எழுதப்பட்ட தலைப்பு
சமூக வலைதளங்களில்
சரி தவறில்லாமல்
தினசரி எழும் தலைப்பு
சிந்தனை செய்யாமல்
சிறுப்பிள்ளை தனம் செய்யும்
பொல்லாத தலைப்பு
பாதி புரிந்துக்கொண்டு
மொத்தமாய் சொதப்பும்
வித்தியாசமான தலைப்பு
பார் போற்றும் பவனியில்
ஊர் தூற்றும்
உன்னத படைப்பு
"பெண் "என்ற அழகான தலைப்பு ......