கனவுகளுக்கு கால்கள் இல்லை
கனவுகளுக்கு கால்கள் இல்லை
இரவெல்லாம் நடக்கிறது
கவிதைகளுக்கு சிறகுகள் இல்லை
வானமெல்லாம் பறக்கிறது
அலைகளுக்கும் கால்கள் இல்லை
கடலெங்கும் ஆடுகிறது
அன்பிற்கோர் எல்லையே இல்லை
மனித மனமெங்கும் விரிகிறது
~~~கல்பனாபாரதி~~~
a