நவீனம்

நவீனம் எபொழுது பிறக்கிறது
பழமை புரிதல் இல்லாத பொழுது
அதை கற்க மனம் இயலாத பொழுது
தான் என்ற சுயம் வெளிப்படும் பொழுது

பழமை ஏன் பழமையானது
அதில் ஒரு செம்மை இருப்பதினால்
ஒரு விதமான கட்டுப்பாட்டில் இயங்கியதனால்

நவீனம் எல்லாம் ஒரு காலத்தில் பழமையாகும்
நயம் சுவை செம்மை இருந்தால்

நவீனம் நவீனம் என்று அதன் பின்னால் ஓடுகிறோம்
புரிதல் இல்லாத கவர்ச்சியில்

ஈசல் மற்றொரு நாள் வாழ்வதில்லை
ஆனால் யானை அப்படியில்லை
அது அழிந்தாலும் தந்தம் அழிவதில்லை

பழைமையில் ஒரு மேதமை பிறக்கிறது
இன்று நவீனமே மேதையாகிறது

நவீனம் என்பதில் புரிதல் இல்லையென்றால்
ஒருநாள் பூஜ்யமாகிவிடும் நாம் என்ற பழமை !

எழுதியவர் : ப. கோபாலகிருஷ்ணன் (23-Sep-14, 11:33 pm)
Tanglish : naveenam
பார்வை : 121

மேலே