ஒற்றை முத்தத்தில் கொடுக்க வேண்டும் காதலை 555

என்னவளே...


என்னோடு நீ பேசும்
ஒவ்வொரு வினாடியும்...

என்னை நான் மறந்து
ரசிக்கிறேன்...

என்னிடம் எதையோ
சொல்லி...

சிரித்து கொண்டுதான்
இருக்கிறாய் நீ...

என்னை தொலைத்து
கொண்டு இருக்கிறேன்...

உன்னில் நான்
மெளனமாக...

கட்டு படுத்தி வைத்த
என் காதலை...

ஒற்றை முத்தத்தில் உனக்கு
கொடுத்துவிட நினைத்து...

நான் உன்னை அணைக்க
முயற்சிக்கையில்...

நாளை பார்க்கலாம்
என்று நகர்ந்தாயடி...

என்னை பார்த்த படியே...

எல்லாம் தெரிந்திருந்தும்
எப்படி முடிந்தது...

உன்னால் மட்டும் கண்களால்
காதலை எனக்கு காட்டியபடி...

சொல்லி கொடடி
எனக்கும்...

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது...

எல்லாம் தெரிந்தும்
தெரியாதது போல.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Sep-14, 4:29 pm)
பார்வை : 121

மேலே