விந்தை உலகம் - இளை

பெண்களின் உலகமே
விந்தைதான்
அதில் எந்தன் உலகம் இது ..........

விழுந்த பேனாவின் மூடியை தேடாது
புது பேனாவை தேடும் நானே
மணிக்கணக்காய் கோலமிடிவது
சற்று விந்தைதான்??????

கலியுக பெண்ணென
கணினியில் மூழ்கி
கர்வ கூச்சலிடும் நானே
சமையலறையில்
கைகளை சுட்டுக்கொல்வதும்
சற்று விந்தைதான்????????

சில ஆண் வர்க்கத்தை
வெறுக்கும் நானே
எனக்கானவனை
சில சமயங்களில்
தேடுவது சற்று விந்தைதான் ?????????

நீண்ட கால்குழாயும்
அரை கை சட்டையுமாய்
திரியும் நானே
சீலையும் சிரிப்புமாய்
பூவும் பொட்டுமாய்
திருவிழா தேர் முன்
நிற்பது சற்று விந்தைதான் ????????

சாலையை கடக்கவே பயந்து
அப்பாவின் கைகளை
பற்றிய நானே
சாதனை படைக்க முயல்வதும்
சற்று விந்தைதான் ??????

கயவர்களை கண்கொண்டு
எரிக்கும் நானே
உதிர்ந்த கூந்தலை கண்டு
கவலை கொள்வதும்
சற்று விந்தைதான் ?????

குளு குளு அறையிலும்
மெத்து மெத்து இருக்கையிலும்
களைப்படையும் நானே
சேற்று வயல்களில்
சிறகடிக்க பறப்பதும்
புல்வெளியில் முகம்
புதைத்து இதழ் விரிப்பதும்
சற்று விந்தைதான்???????

எழுதியவர் : இளையராணி (25-Sep-14, 4:26 pm)
பார்வை : 114

மேலே