அனைத்தும் அழகுதான்
படைப்பு அனைத்தும் அழகே ............
என் படைப்பு
இயல்பானதுதான்
சிலநேரம் கற்பனைகள் பல சேர்ந்திருக்கும்
கவிதைகள் அனைத்தும் கற்பனையே.......
பிறக்கும் போது எவரும் குறையோடு பிறப்பதில்லை
இறக்கும் போதும் எவரும் நிறைவோடு இறப்பதில்லை
அங்கே இங்கே அலைந்து சேர்த்த செல்வமெல்லாம்
அப்போது அவனுக்கு கிடைப்பதில்லை
அரை வட்ட வானவில்லும் அழகுதான்
முழுவதுமாய் மறைந்திருக்கும்
நம் மனதும் அழகுதான் ........................
கலைந்து சேரும் நம் உறவும் அழகுதான்
காரியத்திற்கு மட்டும் கூடும்
கண்டவர்களும் அழகுதான்..........
மனதின் புலம்ப்பலும்அழகுதான் ........
பார்க்காமல் பார்ப்பதும் அழகுதான் ......
படித்துக் கொண்டிருக்கும் தங்கள் முகமும் அழகுதான்
தாகத்தில் தவிப்பதும் அழகுத்தான் .
தனிமையில் சிரிப்பதும் அழகுதான் .......
தேம்பி அழும் குழந்தையும் அழகு தான் ........