காதலன் - இராஜ்குமார்

காதலன்
==========

மழைக்கு குடை
வெயிலுக்கும் குடை
நிழலாய் நிற்குது
காதலன் கைகளில்
வாராத காதலிக்காக
காதலுடன் ...!!

காலம் மாறினாலும்
அவளின் அதே தோற்றம்
இமைமுன் இல்லாதவள்
காதலன் கண்ணில்
காதலுடன் ..!


உடைந்த சன்னல் வெளியே
துளிகளாய் துள்ளுமவளுடன்
சாரலோடு சண்டையிடா
காதலன் சமிக்கைகள்
காதலுடன் ..!!


நிமிட நினைவுகள் நிறைய
அவளை வெறுக்காமல்
வாசல் காண வழிகளில்
காதலன் வாழ்வான்
காதலுடன் ...!!

- இராஜ்குமார்

நாள் : 31 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (27-Sep-14, 10:51 am)
பார்வை : 165

மேலே