எரிப்பு
உயிரற்றவைகளை எரிக்கும் சடலங்களே
உங்கள் வீடும் வீதியும் எதிர்பாராமல்
இயற்கையால் எரிக்கப்படும்போதுதான்
தெரியும்
உங்கள் வயிற்றின் எரிச்சல்.......
செய்யாத தவறுக்கு நிற்க வைத்து
தண்டிக்கும் உங்களையும்
ஓட ஓட விரட்டி கொள்ளும் மரணம் ...
புயல், வெள்ளம் என
என் புனர் ஜென்மமாக மாறி .....
சக்கரத்தை நிறுத்தி கொண்டு
சரித்திர போர் புரிந்துவிட்டதாய்
நினைக்கும் வீரமற்ற வீணர்களே
ஒருமுறையேனும் சிந்தியுங்கள்
உங்களை சுமக்கும் நான்
ஒரு நொடி உருக்குலைந்தால்
மறு நொடி உங்களின் உயிர் குலையும் என்பதை ...!!
கவிதாயினி நிலாபாரதி