சில தேன் துளிகள்
அன்பே
உன்
அழகிய பாதத்தை
முத்தமிட்ட முற்களும்
ஒடிந்த முள்ளாய்
உன்னுடனேயே
புறப்பட்டு விட்டது
வாலறுந்த பல்லியாய்
என்னை மட்டும்
வீதியில் விட்டுவிட்டு ....!
**********************************
செடி முழுதும்
மல்லிகை மொட்டுக்கள்
நீ
கடந்து சென்றதும்
பூத்து சிரிக்கிறது
வாலிப மொட்டுக்களாய் ...!
************************************
கிழட்டு குரங்குக்கு
பழம் கொடுத்தாய்
அது சாப்பிட்டு விட்டு
பால் கேட்கிறது
வாலிப குரங்காய் .....!
***********************************
உனக்கான
கடிதம் வரைந்தேன்
எழுத்துக்களுக்கும்
காதல் வந்துவிட்டது ...!
***********************************
இன்றும்
நீ
அடித்து அடித்து
கூட்டுவாயென
என்
காதல் மனசு போல்
காத்துக்கிடக்கிறது
உன் வீட்டு முன் வாசல் ....!
***************************************
சிகப்பு ரோஜாவை
உன் கூந்தலில்
சூடிக்கொண்டாய்
மற்ற ரோஜாக்கள்
கோபித்துக்கொண்டன
சிகப்பாக பூக்கவில்லையே என்று .....!
********************************************
குளத்துக்கு
தண்ணீர் எடுக்க வந்தாய்
தவளைகள் சப்தமிட்டு
தரைக்கு வந்து மகிழ்ந்தன
உன் முக தரிசனம் காண ...!
********************************************
நீ
வரும் வரை
அனலாய் கொதித்த
பேருந்து நிறுத்துமிடம்
நீ
வந்தவுடன்
"ஐய்" கட்டியாள்
குளித்துக்கொண்டது ......!
********************************************