தீர்ப்பு

உப்பு தின்னவன்
தண்ணி குடிப்பான்
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
பிறர்கென்ன முற்பகல்
செய்யின் தமக்கென்ன
பிற்பகல் தாமே வரும்
அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
மூன்று ப களில் உருவானது (பணம், பதவி, பட்டம்)
இந்த ப வில் அழியாது (பரிகாரம்)
தெய்வம் தந்த பதவி
அல்லவையே அழித்து
நல்லவையே நிலைநிறுத்த
அதிகார வர்க்கம் சரியானால்
அரசியல் வர்க்கம் துணியாது
முளையிலே கிள்ளினால் (ஊழல்)
மரத்தை வெட்ட வேண்டாம்
பாடம் சரியாக கற்றால்
பாவம் செய்ய துணியாது

எழுதியவர் : geetha (27-Sep-14, 9:33 pm)
Tanglish : theerppu
பார்வை : 123

மேலே