விழியை விரட்டாதே - இராஜ்குமார்
விழியை விரட்டாதே
====================
கண்கள் இருண்டன - உன்
நினைவுகள் திரண்டன
நினைவுகள் குறைவு - அதை
மீட்டுவதில் மனநிறைவு
கோவை செல்லும் பயணம்
பாவை உன்விழியே பாதையாய்
அறைக் கதவை எட்டு
மணிக்கே மூடிவிட்டேன்
இமைக் கதவை இன்னும்
இறுக்க முடியவில்லை
உருக வைக்கும் நினைவுகள்
ஓய்வை சிதைத்து
உறக்கம் உடைத்து
விழியை மட்டும் விரட்டுதடி ..!
- இராஜ்குமார்
நாள் : 4 - 9 - 2011