மனோ ரெட் - பார்க்கப்பட வேண்டியவர் , பாரட்டபடவும்
புதியதாய் வந்தவர்களை தேடிய போது ஒரு பழைய முத்து கிடைத்தது .அந்த முத்து மனோ ரெட் .(Mano Red ) மனிதர் 2012 நவம்பரில் என்ட்ரி .
"என்னைத்தவிர யாரும் என்னை அவமானப்படுத்த முடியாது...!!!' என்று சுயவிவரம் கூறுகிறது . அங்கேயே பளிச் ...தெரிகிறார் மனோ ரெட் .
மூன்று கவிதைகள் மட்டும்தான் பகிரப்போகிறேன் .மீதி நீங்கள் படித்து ரசியுங்கள் .
இளைஞர்... நம்பிக்கை கொடுக்கிறார் .நன்றாவகவும் எழுதுகிறார்.
முதல் கவிதை - மாத்தி யோசி .( கவிதை என் - 208842 )
//மரங்கள் பற்றியும் மழை பற்றியும்
பேச,எழுத நேரமிருக்கும்
நமக்குத் தான்,
நடுவதற்கும் நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை...!!
இறைவன் நல்லவன்,
எத்தனை வருடங்கள் கழிந்தாலும்,
பிச்சைக்காரிகளின்
கையில் இருக்கும் குழந்தையை
கைக்குழந்தையாகவே வைத்திருக்கிறான்...!!
- என்ன சொல்வது.! இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன் .. என்று நீங்களும் , நானும் ஒரு சேர சொல்லவேண்டும் .அவ்வளவே ....
...............................................................................
அடுத்து " மூடர் கூடம் " - கவிதை எண் 212262 .
அதில் ஒரு பத்தி .
//வேற்றுமை ரத்தம் குடிக்கிற
பகுத்தறிவு இல்லாத அட்டைப் பூச்சிகள்,
இல்லாதவனுக்கு இலை விருந்தும்,
இருப்பவனுக்கு இல்லை
என்றும் சொல்லக் கூடிய
இழிந்த கிழிந்த கூட்டம் இது. !! //
இக்கவிதை இறுதியில் பெரியாருக்கே மாலை போட்டு , கும்பிடுவதை சரியாக சாடி இருக்கிறார் . எந்த சீர்திருத்தவாதியும் அவனை துதிக்க சொல்ல மாட்டான் . அவன் செயல்களை பின்பற்றுதல் / அவனினும் சிறப்பாக செய்தல் தான் அவன் எதிர்பார்ப்பது .அதை அடித்து சொல்வதே இக்கவிதை.
கவிதை எண் 195658 னும் (பிச்சை பாத்திரம் ) இதே கருத்தை அன்பாகவும் சொல்கிறது .
...........................................................
அடுத்து ...திமிரு புடிச்ச பொண்ணு (காதல் கவிதை) ...எண் 190578
வாசலில் கோலம் போடா வராத பெண் பற்றி எழுதிகிறார் .அதில் சில வரிகள் கிழே .
// சர்வாதிகாரிகளின் காலத்தில் -
தப்பித்தவறி அவள்
பிறந்திருந்தால்,
இந்த இரக்கமில்லா செயலுக்கு
சரித்திரப் புகழ் கிடைத்திருக்கும்..!!
இப்போதும் மோசமில்லை,
அவளின் ஓரப்பார்வை கோபமும்,
சினுங்கியதால் சிவக்கும் மூக்கும்
அத்தனை கொடியவளுக்குரிய
சர்வாதிகாரத்து சின்னங்களே...!! //
இனி என்ன . மனோ ரெட் படைப்புகள் படிப்போம் .அவரை வாழ்த்துவோம்
தொடருங்கள் மனோ ரெட் .
வாழ்த்துக்கள் .
பி கு - மனோ ரெட் சில இடங்களில் நீங்கள் புரியாத ஏதோ வடிவங்களில் ( பிற மொழியா ? ...இருக்காது ) பதித்து இருக்கிறீர்கள் . அதை தவிர்த்து விடுங்கள் .நன்றி .