வரம் தருவாயா
தீந்தமிழ் தவிர்த்து
உலகின் அதிஉன்னதம் வாய்ந்த
அத்தனை மொழிகளும் தத்தம்
பெருமை,வளமை,செழுமையை
துணையாய் கொண்டு
வழிநெடுக வரிசையாய் வாசலில்
என் கற்பனை கதவு திறந்ததும்
வஞ்சியுனை வர்ணித்திடும்
வார்த்தைகளை சுமந்திடும் வரிகளிலோ
வரிகளை சுமந்திடும் வாக்கியங்களிலோ
வாக்கியங்களை சுமந்திடும் வர்ணனைகளிலோ
நிதர்சன கருவாகவோ
மைய பொருளாகவோ கூட வேண்டாம்
கடைநிலை வார்த்தையாகவேனும்
வாய்த்திடும்
அரும் வரம் வேண்டி .....