குருட்டுத்தனமான ஆசை க்ரைம்
ஆட்டோ பார்க் ... அரட்டை கும்பல் கிசு கிசு உரையாடல் .........
" டேய் உனக்கு தெரியுமா விஷயம் ...1948 ஆண்டுக்கு மேல் உள்ள பழைய பாஸ்போர்டுக்கு நிறைய லெட்சக்கனக்கில் காசு தாராங்க்லாம்டா ...
" உங்க வீட்டுல இப்படி பாஸ்போர்ட் இருந்தால் சொல்லு
ட்ரை பண்ணி பாப்போம்"
-------------------------------------------------------------------------------------------------------------------
நண்பன் - 1
"இதுதான் அந்த பாஸ்போர்ட்டா ?. இதில் என்னடா விசேசம் ?? >>>
நண்பன் - 2
உனக்கு இத பத்தி தெரியாதா ??? சொல்கிறேன் கேட்டுக்கோ ..இது எமது நாட்டை பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சி செய்த போது அவர்கள் இசூ பண்ணின
பாஸ்போர்டாம்
எமது நாட்டில் உள்ள கொஞ்ச பேருக்குதான் இந்த பாஸ்போர்ட் கிடைத்ததாம் . இப்போ அவர்களின் நாட்டில் உள்ள ஒரு கண்காட்சிக்கு வைக்க இப்போ பெரிய வெல கொடுத்து வாங்குறாங்களாம்.
நண்பன் - 1
இத குடுத்தா. எவ்வளவு தருவாங்க ??
நண்பன் - 2 :
இத குடுத்தா....இதுட விசா வலிவ் பார்த்து .. 2 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் வரையில தருவாங்களாம் ..
நண்பன் - 1:
இத ஏன் நீ குடுக்கல்ல ??
நண்பன் - 2 :
நல்ல வெல வரும்வரையில காத்துகொண்டு இருக்கிறேன் ..
நண்பன் - 1:
போலீஸ் கேஸ் ஒன்னும் இல்லைதானே ...
நண்பன் - 2
நிச்சயமாக போலீஸ் கேஸ் இருக்கு ..இது எங்கட கவேர்மேண்டுக்கு அறிவிக்காத, தெரியாதா விடயங்கள். இது எல்லாம் இல்லீகலா தான் நடக்குது.எனக்குத்தெரிந்த நிறையப் பேர்..... இப்படி கொடுத்து காசு எடுத்திருக்கிறார்கள். ..
அதனால பண விடயங்கள் எல்லாம் சுமூகமான முறையில் தான் முடிசுக்கொல்லனும் ..இதெட்கென்று ரூல்ஸ் ரேகுலேசன் எல்லாம் இல்ல. .........
சப் ஏஜெண்டுகள் இருக்கிறாங்க .. அவங்க மூலம்தான் இதனை கச்சிதமாக முடித்துக்கொல்லனும்.
நண்பா - 2.! : சும்மா இருக்கிற பாஸ்போர்ட் தானே .. கொடுத்தா காசு !! இல்லேன்னா குப்பத்தொட்டி ..கூடி கழிச்சி பாரு .. கணக்கு சரியா வரும் .
-------------------------------------------------------------------------------------------------------------
மாநகரில் ..அடுக்கு மாடி கட்டிடத்தில் ..ஒரு அறை...!
வெளிநாட்டு தனியார் முகவர் காரியாலயம் ...பல கணனி உத்தியோகத்தர்கள் பலர் படு பிசியாக வேலை பார்க்க ...வெளிநாடு சம்பந்தமான டிஜிடல் போர்டுகள் ஆங்காங்கே காட்சி அளிக்க .. முன் ரிசெப்சனில் உதட்டில் லிப்டிக் கரையுடன் ஆங்கில வார்த்தைகள் ஜொலிக்க ..ஒரு மங்கை ...
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் இருவரும் பதட்டமான நிலைமையுடன் .................
நண்பர் 2 : முன் ரிசெப்சனில் மங்கை முகம் பார்த்து ...
" மன்னிக்கவும் .... பழைய பாஸ்போர்ட் விடயமாக யாருடன்
கதைக்கனும் .................என்று முனு முணுத்து கேட்டார் .
மங்கையும் ஒரு வியப்பு பார்வையுடன் அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு .. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க ..
உள்ளே ஒருவர் இருக்கிறார். அவர் வந்த உடன் நீங்கள் போகலாம் .. என்று கூறி முடிப்பதற்குள் ........
உள்ளிருந்தவர் வெளியே வர ......
சார் நீங்க ரெண்டு பெரும் உள்ளே போகலாம் என்று அனுமதி கொடுக்க ...
இரண்டு பெரும் உள்ளே சென்றனர் ..
மீசையோடு ஒட்டிய குறும் தாடியுடன் ..டை + கோர்ட் உடன் ஒரு 35 வயது மதிக்கத்தக்க நபர் ..அழகு வரவேற்புடன் ..
வாங்க சார் .. உக்காருங்க ..உங்களுக்கு நான் எந்த வகையில் உதவனும் என்ற ஆங்கில வார்த்தையோடு .. ஆரம்பிக்க
நண்பன் 2 : சார் .. பிரிட்டிஷ் பழைய பாஸ்போர்ட் விசயமா .... என்று துவங்கிய உடன் ..
ஆபிசெர் : எங்க .. காண்பீங்க.....? . என்று மறு பேச்சில்லாமல் கூற ...
நண்பன் 2 : இந்தாங்க சார் .. இது என்னுடைய அப்பாவுடையது ..அவர் முன்பு ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவர் ..அதனால் செல்வச்செழிப்பா வாழ்தவர். அவர் அப்பவே பல நாடுகளுக்கு போயிருக்கிறார் என்ற விசா பக்கங்களை பிரட்டி ஆதாரங்களை காட்ட ..
ஆபிசெர் : எல்லாம் காதில் வாங்கிக்கொண்டு .. பாஸ்போர்டை பிரித்து பார்த்து தமது கணணி சிஸ்டத்தில் அடையாளங்களை ஸ்கேன் மூலம் குறித்துவிட்டு ,,
நண்பன் 2..வை பார்த்து பேச ஆரம்பித்தார்.
சார் .....இதில நாங்க எதிர் பார்க்கும் சில முக்கியமான விடயங்கள் இல்லை. இருந்தாலும் இந்த பாஸ்போர்ட் வலிட் இருக்கு.
இதற்கு எங்களால ஒரு லட்சம் மாத்திரமே தர முடியும் என்று ஒரே வார்த்தையில் கூறவே ..
நண்பர்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் வியப்பு பார்வை பார்த்துவிட்டு ..
சரி சார்... பரவாயில்ல தாங்க ..என்று நண்பன் -2 கூறவே ...
2000 கட்டுகொண்ட லட்ச ரூபாவை அவர் மேசையில் வைத்துவிட்டு ..அந்த பாஸ்போர்டை தனது பாதுகாப்பு லாக்கரில் மூடிவிட்டு ..
-----------------------------------------இது போன்ற பாச்போர்டுக்கள் எத்தனை என்றாலும் கொண்டு வாங்க ..அதற்குரிய காசை உடனே தரோம் ..
இப்போது நீங்க கிளம்பலாம். என்று கூறியதுடன் ..போகும்போது கட்டாயமாக உங்க பெயர் .., அட்ரெஸ் ..,மொபைல் நம்பர் ரெசப்சனில் கொடுத்துவிட்டு போங்க என்று கூறி .. வழியனுப்பி வைத்தார் ஆபிசெர் .
----------------------------------------------------------------------------------------------------------------
ஓன்று இல்லாததற்கு இது பரவாயில்லை ..என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்றவாறு இன்ப அதிர்ச்சியுடன் வீடு திரும்பிகொண்டிருக்கையில் ..
நண்பன் -1 : டேய் நண்பா ! இதே பணத்தை வைத்து இது போன்ற 10 பாஸ்போர்ட்களை குறைந்த விலையில் வாங்கி இங்க கொடுத்தா எப்படி இருக்கும் ........கொஞ்ச நெஞ்ச காசா......10 லட்ச்சம்டா...!!!
நண்பன் - 2 : என்னடா சொல்லுற !!
நண்பன் - 1 : இந்த செய்தியெல்லாம் எமக்கு மட்டும்தான் தெரியும் ..நாங்களே சப் எஜெண்டுக்களாக மாறி இதனை குறைந்த விலையில் சேகரித்து இவங்களுக்கு கொடுப்போம் ...என்ன சொல்ற !!!
நண்பன் - 2 : எப்படி டா ?
நண்பன் - 1 : கூடி கழிச்சி பாரு .. கணக்கு சரியா வரும் .
-------------------------இனி பாஸ்போர்ட் வேட்டை ஆரம்பம் ---------------------------------
----****************----------------------****************---------------------****************-------------
நண்பன் -1 : இப்போ எத்தனை பாஸ்போர்ட் உனக்கிட்ட இருக்கு ..
நண்பன் - 2 : ஊர் ஊரா சேர்த்தியும் 20 த் தாண்டல ..இத்தனையும் சேர்க்க இப்போ வீட்டையும் , காணியும் ..மனைவிட தங்க நகைகளையும் ஈடு வைத்துவிட்டேன் ..5 லட்சத்தை தாண்டிய கடன் வேற இருக்கு..
நண்பன் -1 : இதனை கொடுத்து எல்லாத்தையும் செட்டில் பண்ணிடலாம்
..நண்பா கவலைப்படாதே ...குறைந்தது 20 லட்சமாவது
கிடைக்குமில்ல ...
--------------------------------------------------------------------------------------------------------------------
மாநகரில் ..அடுக்கு மாடி கட்டிடத்தில் ..அதே .. அறை...!
நண்பன் -1 : நண்பா .. இந்த இடம்தானே ..நல்லப் பாரு ..பில்டிங் மாறி
வந்துட்டோமோ ..
நண்பன் -2 : இல்ல நண்பா ....எனக்கு நன்றாக மதிப்பு இருக்கு.. அதே ..இடம்தான் .. ஆனால் இங்கு இப்போ ...வேரும் சுவரும் கண்ணாடி.. மாத்திரமே
இருக்கு.. !!!!!! என்னடா நடக்குது இங்க ..!
நண்பன் -1 : வேச்சிடான்யா .. ஆப்பு !!
நண்பன் -2 : பதட்டத்துடன் அடுத்த மாடிக்கு போவோம் ..என்றவாறே
விர்ரென்று நடந்தேரினார்கள் ..
அது ஒரு கூல்ஸ் பாட் அங்கே பலர் இருந்து ,குளிர்பானங்களை குடித்தவண்ணம் .. ஒரு மூலையில் இருந்த டிவிப் பேட்டியின் மீது கண்களை ஓடவிட்டுக்கொண்டு இருந்தார்கள் ..
அதில் மதிய நேர செய்தியும் போய்க்கொண்டிருந்தது. ஷாப் உரிமையாளரிடம் போய் கீழிருந்த பிரைவட் ஏஜென்சி என்ன ஆனது >>> என்று வினவ !!!!
உரிமையாளர் ...கிண்டல் சிரிப்புடன் ....அவர்களா ??? இதோ..... என்று டிவிப் பெட்டியின் மீது ஆள்காட்டி விரலை நீட்டினார் ..அதில் மதியச் செய்தியில் பரபரப்பு செய்தியாக .....
---------------------------------------------------------------------------------------------------------------
போலி பிரிட்டிஷ் பாஸ்போர்ட்களை தயாரித்து ...அதன் ஒரிஜினல் பாஸ்போர்டுக்கு பெரும் தொகையெய் கொடுப்பது கொண்டு அவரை குறித்தே ...பல லட்சங்கள் சம்பாதிக்கும் திருட்டு கும்பல் கைது ....
--------------------------------------------------------------------------------------------------------------------
போலி பிரிட்டிஷ் பாச்பொர்ட்கலின் அடையாளங்கள் ..போலி எண்கள்...என்று
குறித்து காட்டி ... காண்பிக்கப்பட்டதும் ....
------------------------------------------------------------------
உடனே ....நண்பர்கள் இருவரும் கைவசம் இருந்த பாஸ்போர்ட்களை பிரித்து பார்த்து விட்டு ..
தலையில் கைவைத்து ....கைசேத கண்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு ... உண்மை நிலை புரிந்து
கண்கள் கலங்கிய வண்ணம் நாதியுற்று நின்றார்கள்............
நண்பன் - 2 மட்டும் கொஞ்ச நேர கதி கலங்கிய நடையுடன் ...அப்படியே மயங்கி விழுந்துவிட்டான் ... .
----------------------------------------------------------------------------------------------------------------------
(இந்த மயக்கம் கொஞ்ச நேரத்துக்கு பின் தெளிந்து விடும் ஆனால் குருட்டுத்தனமாக காசு சம்பாதிக்கும் மயக்கம் மட்டும் தெளிந்து விடாத மயக்கமாகும்)
(முற்றும்)
-------------------------------------------------------------------------------------------------------------------
திக்குவல்லை - ரிப்னாஸ் தென்னிலங்கை

