காலம் மாற்றுமா

இறந்த காலம் பாழாய்ப்
போனது என் வாழ்வில்
நான் ஏழையாய் பிறந்ததால்
பள்ளிப் படிப்பு அழகாய்
கிடைக்கவில்லை
நான் ஏழையாய் பிறந்ததால்
சாதாரண தரத்தில் சித்தி
அடைந்தும் பலனில்லை
நான் ஏழையாய் பிறந்ததால்
உயர்தரம் கற்க வாய்ப்புக்
கிடைக்கவில்லை
நான் ஏழையாய் பிறந்ததால்

நிகழ்க்காலம் சூன்யமாகிப் போய்
கொண்டிருக்கிறது
நான் ஏழையாய் இருப்பதால்
வேலை செய்யும் இடத்தில்
பல துன்பங்கள்
நான் ஏழையாய் இருப்பதால்
வீட்டில் தாயின் தீரா நோயும்
தந்தையின் குடிப்பழக்கமும்
சகோதரியின் முதிர்க்கன்னி
வயதும் ஆரா துன்பங்கள்
நான் ஏழையாய் இருப்பதால்

எதிர்காலம் பல கேள்விகளோடு
என் வாழ்வில்
காலம் ஏற்குமா என் சகோதரியை ?
காலம் மாற்றுமா என் தந்தையை ?
காலம் வாழ வைக்குமா என் தாயை ?
காலம் தருமா என் படிப்பை ?

எழுதியவர் : fasrina (30-Sep-14, 9:38 am)
பார்வை : 87

மேலே