பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பாரத பெண்கள்
இன்று எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது கோவில், கல்லூரி, பள்ளி, கார், பேருந்து,காடு, கரை, கம்மா, சந்து, பொந்து, இட்டு, இடுக்கு எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லை. இதற்கு என்ன காரணம்? சமூகமா? சமூக சார்ந்த சூழ்நிலையா? அந்த காலத்தில் பாஞ்சாலியை துரியோதணன் சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினான் என்பதற்காக மிகப்பெரிய பாரத போர் நடந்தது லட்சக்கணக்கான வீரர்கள் போரில் மாண்டார்கள்.
ஒரு பெண்ணின் மானத்திற்காக ஒரு மகாபாரதமே உருவானது அதுவே நமக்கு பாடமாக வைக்கப்பட்டது அப்படி இருந்து அதே பாரத தேசத்தில் பெண்கள் கற்பழிக்கப்படுக்கின்றனர் இதற்கு எந்த தண்டனையும் இன்றி காமூகர்கள் உல்லாசமாக வலம் வருகிறார்கள் அயல் நாட்டில் நவநாகரீக மக்கள் வாழ்க்கின்ற தேசத்தில் கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கிறது. ஆனால் 'கலாசாரத்திற்கு பேர் போன இந்தியாவில் கற்பழிப்பு குற்றத்திற்கு மன்னிப்பு மட்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது'
சிலர் சொல்கிறார்கள் பாலியல் வன்முறைக்கு பெண்கள்தான் காரணம் அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் என்று. சிறு குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்களே அந்த குழந்தையிடம் என்ன கவர்ச்சி இருக்கிறது? உடல் ரீதியான மாற்றங்கள் கூட ஏற்படாத குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்களே இதை என்னவென்று சொல்வது? சிறு
குழந்தை என்ன கவர்ச்சி உடை அணிந்தது? உடை காரணமென்று சொல்பவர்கள் ஒருவகையில் காமூகர்கள் தான் அவர்கள் உத்தமர்கள் இல்லை காமத்தால் அம்மாவிற்கும், அக்காவிற்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுமா?
மற்ற நாடுகளை போல் நம் இந்தியாவிலும் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் அப்போதுதான் பெண்களை தொட பயப்படுவார்கள் இல்லையெனில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கும். அன்று பாஞ்சாலிக்கு நீதி கிடைக்க வில்லை என்றாலும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் ஆனால் இந்த பாரத நாட்டில் பாரத பெண்களின் பாலியல் கொடுமைக்கு எந்த நியாயமும் கிடைக்க வில்லை. வெட்க கேடு... வெட்க கேடு...