கவிதைக் கண்ணீர்

பாடுபொருள் தேடி
படைப்பாளி சிந்தித்து,
பக்கத்து ஊரிலெல்லாம்
பாத்துவர அலைந்தலுத்து
கிடைக்கவே கிடைக்கலையே
மனசு உடைஞ்சழுதான் ..
அந்த ஏமாற்றத்தின்
முதல் கண்ணீர்த்துளி
தந்தது பாடுபொருள்..
கண்ணீரும் கவிதையும்
ஒண்ணுதான்..
உள்ளுக்கு ஒளிஞ்சிருந்து
படக்குன்னு வெளிய வரும்!
கண்ணுக்கு ஒளி கொடுக்கும்!
கவலையெல்லாம் போக்கி வைக்கும் !
இன்னைக்கு தேதிக்கு ,
பாடுபொருள் பஞ்சமில்லே!
பாட்டத்தான் காணவில்லே!

எழுதியவர் : அபி (1-Oct-14, 7:12 am)
Tanglish : kavithaik kanneer
பார்வை : 564

மேலே