ஒப்பீடு

இன்றைய
என்
காலடித்தடத்தை
நேற்றைய தடத்தோடு
ஒப்பீடு இட்டேன் ..
ஏகப்பட்ட வடுக்களும்
ஓரமாய்
கொஞ்சம் இன்பமும்
ஒட்டிக் கிடந்தன.
வசந்த காலத்திலும்
மரங்கள்
இலைகளை உதிர்த்தன
பருவம் தெரியாமல்.

எழுதியவர் : சுசீந்திரன். (1-Oct-14, 8:37 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : oppeedu
பார்வை : 60

மேலே