சிறக வெட்ட துணிஞ்சா கிடைக்காதே

சிறக வெட்ட துணிஞ்சா கிடைக்காதே
==================================

வீட்டுல போட்ட குப்பைகள
பெறுக்க சொன்ன சமயத்துல
ஓடி எடுப்போம் புத்தகத்த
வேலை இனிமே வாராதே

அழுக பொங்குற நேரத்துல
மூஞ்ச பாத்து சிரிச்சாக்கா
வெக்கம் வெரசா வெக்கப்பட
கண்ணு தண்ணி விழுகாதே

கோவமா கண்ணு பாத்தாக்கா
பூவ எடுத்து பிச்சி பிச்சி
கதவு மேல வேகமா வீசுனா
காமடி தர்பார் முடியாதே

புதுசா யாரும் வந்தாக்கா
பெருசா ஏதும் செய்யாம
கெட்ட பேர கேட்டு வாங்கினா
ரகள முழுசா அடங்காதே

திட்ட துரத்துற பேச்சுகள
கொட்டு வச்சு அனுப்பயில
சிட்டா முளைக்குற சிறகுகள
வெட்ட துணிஞ்சா கிடைக்காதே

- இராஜ்குமார்

===========================================
எனது மூன்று தங்கைகளுக்காக

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Oct-14, 8:54 pm)
பார்வை : 125

மேலே