சாதியும் காதலும்
உறவோ உன்னைச்சுடும்
உணர்வோ அனலில் வேகும்
காதல் என்றுச் சொன்னால்
காரி உமிழப்படும்...
தெருவில் திரியும் நாயும்
காதல் செய்து வாழும்
மனிதன் காதல் செய்தால் - அட
சதிச் சண்டைகள் மூளும்...
சமத்துவம் நல்கிடும் காற்றை
சாதி பிரித்து நுகர
சாத்தியமில்லா மனிதன்
காதலைப் பிரிப்பது பாவம்...
நிலவுப் பொழியும் ஒளியை
சாதி பிரித்து அடைய
முடியா முட்டாள் மனிதன்
காதலை பிரிப்பது பாவம்...
குருதியின் நிறமோ ஒன்று
உறுப்பும் உருவமும் ஒன்று
உணர்வில் ஒழுகுது ரத்தம்
மடமை தனத்தின் உச்சம்...
உணர்ச்சியில் சாதிகள் இல்லை
வலிகளில் பேதங்கள் இல்லை
மனதில் ஏனோ பித்தம்
எதுவரை தொடருமோ யுத்தம்...!
பிரியாராம்.