தோழியர் இருவர்

தோழியர் இருவர்
ஆழ்ந்த நட்புடன் பழகி வந்தார்..
ஒருத்தியோ பணக்காரி!
கொஞ்சம் ஆணவக்காரி!
ஆனது திருமணம்
அடுத்தடுத்து இருவருக்கும்!
பணக்காரியின் கணவனோ உயர் அதிகாரி!
இன்னொருத்திக்கு வாய்த்தவன்
அவனிடம் பணி செய்யும் தொழிலாளன் !
காலமது ஓட
அதிகாரியின் மனைவி
அன்புடன் அழைத்தாள் ஓர் நாள்
தன் அன்புத் தோழியை
அவளது இல்லத்திற்கே!
அவளும் சென்றாள்..
அங்கே..
அவள் கண்டது..
அதிகாரியின் அதிகாரத்தை..
அவனிடம் பணி செய்யும்
அவளது கணவன் தன்னை
அத்தனை பேர் எதிரிலேயே
அவமானப் படுத்துகின்ற
காட்சியினை கண்டவுடன்..
ஓடி சென்று தோழியிடம்
அடியே .. இக்கொடுமை
காண்பதற்கா வரச்சொன்னாய் என்னை?
என்று புலம்ப
நகைத்திட்டாள் தோழி!
ஆமாமடி..அன்றொரு நாள்
அடித்துச் சொன்னாய் நீ..
மனித நேயம் பெரிதென்று !
வாதிட்டேன்.. பணமே பெரிதென்று!
என்ன பாவம் செய்தேனோ..
மிருகத்துக்கு வாழ்க்கைப் பட்டேன்
குடிக்கின்றான்..தினம்..
அடிக்கின்றான்..காலையில்..
அழுகின்றான்.!.
நானோ வளமாக இருக்கிறேன்
உன்னை மதிக்க வில்லை என்று..
பேசாமல் சென்று விட்டாய்
ஓர் நாள் எனை கண்ட போது!
நேரில் வந்து நிலை காண
வரச் சொன்னேன்.. அன்புத்தோழி..!
குமுறியவள் தோளைப் பற்றி
தொழிலாளன் மனைவி சொன்னாள்..
வருந்தாதே..வாழைக்கு கீழ் கண்ணு
என்று சொல்வார் நமது ஊரில்..
சரியாகும் இது ..நாள் செல்ல செல்ல ..
வருகின்றேன்..என்று சொல்லி
பிரியாமல் பெற்றாள் விடை
தன் கணவனின் அன்பை எண்ணி!
அன்புத் தோழி சுகம் அடையவும் வேண்டி!

எழுதியவர் : karuna (4-Oct-14, 3:22 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : thoziyar iruvar
பார்வை : 264

மேலே