தீர்ப்பின் மறுபக்கம்
யாரோ விரித்த வலையில் தங்க மீன் சிக்கியது.
யாரோ மூட்டியத் தீயில் சந்தனம் வேகுது.
யாரோ அறுத்த கொடுவாளில் நெல்மணி சாயுது.
யாரோ குடை விரித்ததில் விரலொன்று நசுங்கியது.
யாரோ குழைந்து அழைத்ததால் - தன் கையில்
சிக்கித் தவித்தத் தங்கமீனை - அதன்
சரித்திரத்தை உடைத்தெடுக்க உடைவாளைத் தீட்டியது.
எரியும் தீயில் வேகும் சந்தனத்தின் வாசத்தை நாடுது.
தீர்ப்பு எனும் கொடுவாளால் நெல்மணியின்
ஈர்ப்பினை அறுத்தெடுத்தது. - தமிழகத்தின்
தங்கமீனாக,சந்தனமாக,நெல்மணியாக
தலை நிமிர்ந்த விரலதனை கட்டிப்போட்டது.
குடை விரித்து நடைத் தளர்த்தும் நாடகத்தை
குறுகிய சுவருக்குள் கோலேச்சும் ராஜாங்கம் நடந்தது.