என் காதல்

உன்னால் உனக்காக
உன்னோடு மட்டுமே
இருந்த என் நாட்கள்
இன்று ஏனோ
இருளாகி விட்டது

விட்டுச் சென்றும்
விடாமல் துரத்தும்
உன் நினைவுகள்
உள் மனதில்
ஊசி போல் குத்துதடா

ஒருமுறையேனும்
ஒரே ஒரு கவிதையேனும்
அவனை வெறுப்பது போல
எழுத நினைத்ததுண்டு
கண்ணீர் பட்டு கலங்கிய
கடைசி வரிகளில் தெரிந்து போகும்
அவன் மீதான என் மொத்த காதலும்

எழுதியவர் : யாதிதா (6-Oct-14, 4:18 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 130

மேலே