உனக்காக ஒருத்தி
காதலில் தோல்வியுண்ட தன் மகனை பார்த்து தாய் கூறுகிறாள் ..,
பருவம் வந்த வயசில
பார்த்திருப்பா அவ உன்ன
பசி தூக்கம் நீ மறந்து
படுத்திருப்ப உறங்காம
ஆளில்லா இடங்கண்டு
சிரிச்சுவப்பா உன பார்த்து
தனியே பேசவப்பா-சிரிக்கும்
ஊரே உன பாத்து
ஆத்தோரம் வரச்சொல்லி
ஆச வர்த்த பேசிருப்பா-கடைசியில்
ஆத்தா அப்பன் ஒதுக்கல்ல, இனி
அடுத்த சென்மம் தானென்பா
பாதியில நீதான்
படிப்பையும் நிறுத்திட்ட
பாதை மாறிப்போய்
பொழப்பையும் கெடுதுக்கிட்ட
மாலையும் கழுத்துமாய்
மணவறையில் அவளிருக்க .....
எம்புள்ள மகராசா
உனக்கென்ன குறைச்சலடா ..
வீதியில நீ கண்டவ
விட்டிருப்பா பாதியில
வேதனையில நீயும்
வேறெதையும் செஞ்சிடாத
கடன்பட்டு குடிச்சிடாத
கண்டுக்காம போயிட்டான்னு
உடன்பட்டு வாழ
உனக்கொருத்தி தான் இருப்பா .................