ஏன் உன்னை பிடித்ததென்று

மௌன விரதம் கொண்டு
என் மனதை சாகடிக்கும்
ஒரு வார்த்தை வருமா என
என் மனம் ஏங்கி நிற்கும்

ஏன் உன்னை பிடித்ததென்று
கேள்வி எழுவதுண்டு
எல்லா கேள்விக்கும் தெரியும்
பதில், உன் பெயரென்று

உலகத்தை திரும்ப வைக்க
என்னால் முடியுமடி
உன் உள்ளத்தை வசியம் செய்ய
காதல் கொண்டேனடி ........

முதல் கவிதை எழுந்த நொடி
தவழும் சேய்போல் உணர்ந்தேனே
பல கவிதை ஜனிக்கையிலே
காதலில் மிளிர்ந்தேனே...

எழுதியவர் : ருத்ரன் (7-Oct-14, 7:36 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 92

மேலே