வரமாக உன்னை கேட்கப் போகிறேன்

வானம் தாண்டி
வனாந்தரம் தேடி
வாழ்வை தொலைத்து
வரம் கேட்கப் போகிறேன்
பாதைகள் மாறி
பாறைகள் ஏறி
பார்வைகள் மறந்து
வரம் கேட்கப் போகிறேன்
நாடுகள் கடந்து
நடை பயின்று
நாதம் கொண்டு
வரம் கேட்கப் போகிறேன்
என்னிடம் இல்லா உன்
அன்பை வரமாக கேட்கப் போகிறேன் !