உன்னால் வரும் வசந்தம்
வாழ்வென்பதோ எனக்கு வசப்பட்டது
காரிகை உந்தன் கருவிழி பார்த்து
பூக்களின் மென்மை அறிந்தது உண்டு
அவையும் தோற்றன உன் எழிலினைக் கண்டு..
தேன் எனச் சிந்தும் செவ்விதல் தொட்டு
மெல்லெனத் திறந்தது செந்தாமரை மொட்டு
பூங்கொடி உன்முகம் பார்ப்பது போதும் -என்
பசி எனை விட்டு வெகுதூரம் போகும்
வேல் எனப் பாய்ந்திடும் உன் விழி எந்தன்
நெஞ்சினைக் கிழித்தொரு மோட்சத்தைக் கொடுக்கும்
நான் உந்தன் வரவைப் பார்த்திருந்தால்தான்
வாழ்வினில் எனக்கோர் வசந்தங்கள் பூக்கும்....