வலி

இன்று என்னவென்று கூறுவேன்?
கல்யாணம்.....!
என் காதலனுக்கும் அவன் காதலிக்கும் இன்று கல்யாணம்

அணுஅணுவாய் ரசித்த என் ஆண்மகன்
இன்று அவையில் மணமகனாய் இருக்கிறான்

கண்களாலே என்னை களவாடியவன் இன்று ஏனோ
கட்டைக்கு சட்டை போட்டவனாய் தோன்றுகிறான்

அலங்கார மணமேடையிலே எத்தனை அழகாய்
என்னவன் இருந்தாலும்
மனம் ஏனோ ரசிக்கவில்லை

என்னவன் எனக்கே உரியவன் என்ற
உரிமையின் உயிர் ஊசலாடுகிறது
இன்னும் சில நொடி.....

அவன் தாலிகொண்டு தனக்கென்று ஒரு சொந்தம்கொள்ள
அவனுடனான என் சொந்தத்தை நான் முறுத்திக்கொள்ள
மத்தளங்கள் முழங்க மாங்கள்யதானம் நடக்க

மனசின் ஆசைகளை மஞ்சளரிசியாக்கி
வாழ்த்துக்களாய் என் காதலையே தூவுகிறேன்

முதன்முதலாய் நான் நேசித்தவனாய்.....

இன்று
முதன்முதலாய் பிரியப்போகிறேன்...

அவனுக்கோ இது கல்யாணம்

எனக்கோ இது பிரிவு உபசரிப்பு விழா

எழுதியவர் : Ramasubburaj (8-Oct-14, 6:32 pm)
Tanglish : vali
பார்வை : 98

மேலே