நிறைவாக
உலகுக்கு ஒளியாய் நீ இரு
உன்னைத் தேடும் உலகம்
உன் நிழலாக தொடரும்
எண்ணங்கள் உயர்வாய்க் கொண்டிரு
எதற்கும் தோல்வி இல்லை
எதிரியும் நண்பனாவான்
நல்லதைச் செய்ய நாள் பார்க்காதே
நலமுடன் நன்மையை பகிர்ந்திடு
நலிவும் மெலிவும் நெருங்காது
தோல்வியை ஏற்க தயங்காதே
தோன்றிடும் வெற்றி உனக்காக
தோளும் தாங்கும் உன் வீரம்
சொல்லின் செல்வன் நீயாக
செல்வம் உந்தன் நிழலாக
செழித்திடு வாழ்வில் நிறைவாக