ஆறா வடு

கேட்டிட செவிகொடுத்து
எதிர்ப்புறம் கதைதொடுத்து
பேசிபேசி தீர்த்ததெல்லாம்
பாதியின் மீதியென
ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை .....!!!!!!!!

நெஞ்சத்து அகவையில்
விரிவுரை எழுதி
மடித்த ஒவ்வொருமுறையும்
நானென்னும் மறுப்புறம்
கசங்கியிருந்ததை நானறியேன் .....!!!!

வாழ்வெனும் பார்வைதனில்
எண்ணமென்னும் கலப்படபொருள்
அன்பினில் சுவைசேர்க்க
அடுத்தநொடியே !
காரமென்னும் விவாதம்
சந்தேக சாரல்வழி
மையம்கொண்டது .........!!!!!!!!

இதழினில் இசைத்தெல்லாம்
விழியினில் விளக்கம்சொல்ல
மொழியினில் வழிமறுத்து
தழும்பென்னும் சொல்லவிழ்தாய்
அறுந்ததது உறவது அவகாசமில்லாமல் ..............!!!!!

எழுதியவர் : சுமி (9-Oct-14, 12:51 pm)
பார்வை : 71

மேலே