உழைப்பாளியின் குமுறல்
நினைத்து நினைத்து பசியை நினைத்து
வியர்த்து வியர்த்து தினமும் உழைத்து
உழைத்து உழைத்து உருவம் தொலைத்து
உழைப்பின் முடிவில் உயிரும் தொலைத்து!
அவன் உயிரும் தொலைத்து!!!
உறங்கியவன் உலகினில் மறைந்திடுவான்
ஏய்ப்பவன் பாதியில் நின்றிடுவான்
மேய்பவன் மேனியில் குன்றிடுவான்
உழைப்பவன் உலகினை வென்றிடுவான்!
என்றும் வென்றிடுவான்!!!
உழைப்பாளியின் வியர்வையை விலை பேசும் வீனர்களே
உழைப்பவன் உள்ள வரைதான்
உலகமும் உண்டென்று புரியாதோ!
உங்களுக்கு புரியாதோ!!!