நல்லவன் ஒருவன்
தாய் சொல் மதித்து நடந்தேன்!
நற்புத்திரன் என்றார்கள்!
தந்தை சொல் பணிந்து நடந்தேன்!
நற்தனயன் என்றார்கள்!
சகோதர சகோதரியர் சொற்படி நடந்தேன்!
நற்சகோதரன் என்றார்கள்!
ஆசிரியர் சொல் கீழ்ப்படிந்து நடந்தேன்!
நல்மாணாக்கன் என்றார்கள்!
நண்பர்கள் சொல்நயந்து நடந்தேன்!
நற்தோழன் என்றார்கள்!
மனைவி சொல் மறுக்காது கேட்டேன்!
தலையாட்டி பொம்மை எனத்
தலைக்குத்தலை சொன்னார்கள்!