திரிபு

தவறிழைக்க மனிதனும்,
தண்டிக்க கடவுளும்,
கதவடைக்க இதயமும்,
முகம்துடைக்க அயர்ச்சியும்,
விதிவசத்தால் என,
நிலைநிறுத்தல் இயலுமா?
இல்லை,
விழிகசிந்து மொழியுனர்த்தி,
நிஜம் உரைத்தல் இடருமோ?
செவிபடைத்த பிறவியத்தில்,
இயம்பல்கள் நகருமா ?
விழிபொதிந்த வாழ்க்கைதனில்,
காண்பனவை கலையுமா?
மனம்பதித்து குணம் அடைத்து,
குறிக்கோள்கள் அடையலாம்,
அதனூடே அரக்கமென,
தடைவந்து முடையலாம்,
உடைமைகள் நிலையாமல்,
கோட்டைகள் இடியலாம்,
தோற்று துவளும் நியாயங்கள்,
தூரம்போய் விடியலாம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Oct-14, 9:26 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 74

மேலே