விடியலே வா
![](https://eluthu.com/images/loading.gif)
சொந்த பந்தம் சேர்ந்தது
சுகம் தந்தது அன்று
சொந்த பந்தம் சோதிப்பது
சோகம் தருகிறது இன்று
விடியலை வரவேற்றோம் அன்று
விடியலை வெறுக்கிறோம் இன்று
ஓடி ஓடி உதவி செய்தது அன்று
ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறது இன்று
என்ன செய்வது...?
விடியலே வா ....
பொன் கரங்கள் வீசி தென்றலோடு
கண் இமைக்காமல்
கண் அயராமல்
மன(ண்) ம் வீசி சாந்தமாக
விண்மீன் ஒளியாக
மண் மீனில் நீந்தி வா ...!
விடியலே விடியும் முன்னே வா ...!