நண்பர்கள் கூட்டம்
காரியம் கைகூடும் வரைதான் உறவுகள், காணிக்கை செலுத்தினால் தான் கடவுளும். நண்பனின் நண்பனுக்கு துன்பம் நேர்ந்தபோதும் நானும் வருகிறேன் என்று சொல்லி கைகள் கோர்ப்பது நட்பு. ஒரு கூட்டுப் பறவைகள் நாங்கள், வண்ணங்களால் மாறுபட்ட போதிலும் எண்ணங்களால் இணைந்திருப்போம். கூட்டமாய் திரியும் காடுப்புலிகள் நாங்கள், வீட்டில் அடைந்திருக்க மாட்டோம்.