ஞாயிறு

எழுவாய் வருவாய்
தினம் உறைவாய்
எமநீசன் தீண்டா
உயிர் நீ ....!

அகிலம் உய்ய
மேனி அனலாய்
உலலும் உயிர் நீ !

புவி வாழ
உழைக்கும்
உழவனும் நீ ...!

உனக்கென
எதையும் சேர்க்காது
உடல் தனை எரிக்கும்
தொண்டன் நீ ...!

நிலவை குளிர்வித்து
புவியை உயிர்பித்து
பிறர் போற்றினாலும்
பிறர் தூற்றினாலும்
பொருட்டாய் மதியாது
கடனே என கிடக்கும்
கதிரவனே ...!!

கதிரை விளைவித்து
பசுமையை உயிர்பித்து
அதன் நிழலில் ஒதுங்காத
நிகரில்லா ஞாயிறு ...!

ஏற்றமும்
இரக்கமும்
உனக்கில்லை...!
நீ இல்லாது
ஏற்றம்
எவர்க்குமில்லை ...!

நீ எரிந்தாலும்
அழுதிட எவருமில்லை
உன் அனல் தங்காது
அழுவாத உயிருமில்லை ...!

உயர்வும் நீ !
உயரத்தில் நீ !
இறக்கம் வந்தால்
இறக்கும் உயிர்கள் !!

உலகை விஞ்ஞானம் ஆளட்டும்
உன்னை ஆள பிறந்தோர்
எவரும் இம்மண்ணில் இல்லை !
அண்டம் வாழ உயிர் நாடி நீ !
உன் உயிராய் நேசிப்பதும் அதுதானே !

எழுதியவர் : கனகரத்தினம் (10-Oct-14, 3:47 am)
Tanglish : gnayiru
பார்வை : 150

மேலே