மடி ஆசை

வண்ணங்களால் கோர்த்தெடுத்தேன்
ஏளன எண்ணங்களை சிதறடித்தேன்..!

சிறகடிக்க வேண்டுமென்று சிலநேரம்
சிந்தனைகளில் சில்லறைகள் சேர்த்துவைத்தேன்..!

காரணங்களின் எல்லைகளை என்றும்
காரணிகள் இன்றியே தேடியலைந்தேன்..!

புத்தாடை உடுத்தும் புது எண்ணத்தையும்
புழுதி ஆடைகளால் தினம் மறைத்திட்டேன்..!

விழியோரம் தூக்கம்வந்து தட்டும் நேரம்
வயிற்று பசியோடு அதை நான் விரட்டியடித்தேன்..!

எண்ணெய் வேண்டி தவம்கிடக்கும் தலைமுடியை
எண்ணி கடை கண்ணாடி முன் நின்று சிரித்திட்டேன்..!

தலை சாய்க்க தமக்கை மடியிருந்தும்
தாய் மடிமீது மட்டும் பல நேரம் ஆசை கொண்டேன்..!

எழுதியவர் : ச.ஷர்மா (10-Oct-14, 10:43 am)
Tanglish : madi aasai
பார்வை : 461

மேலே