எனக்கு தருவாயா
உன் கண் பேசும் கவிதையினை
நான் தினம் வாசிக்க
உன் காதலை யாசிக்கிறேன்
எனக்கு தருவாயா ???
உன் மௌனத்தை -- மிக
அருகில் ரசித்திட உன்
காதலை யாசிக்கிறேன்
எனக்கு தருவாயா
உன் பெற்றோர் பாசம்போல்
என் பாசமும் இருக்குமென
உனக்கு நிரூபிக்க உன் காதலை
யாசிக்கிறேன் ....
எனக்கு தருவாயா
திருமணம் ஆனா பின்பும்
ஒரு நண்பனின் உறவு போல்
என் நேசம் இருக்குமென
உனக்கு நிரூபிக்க
உன் காதலை யாசிக்கிறேன்
எனக்கு தருவாயா
உணர்வின் உருவங்களை
கவிதையில் மொழிபெயர்த்தேன்
அதன் அருமைகள் புரியவைக்க
உன் காதலை யாசிக்கிறேன்
எனக்கு தருவாயா
உடல்கள்தான் வேறே தவிர
என் உயிரின் உருவமென
என்றும் நீ இருப்பாய்
என்பதை உனக்கு காட்ட
உன் காதலை யாசிக்கிறேன்
எனக்கு தருவாயா