உனை சுற்றும் உறக்கம் - இராஜ்குமார்

உனை சுற்றும் உறக்கம்
========================
மனதளவில் ரணப்படும்
ஓர் உயிர் - உன்
முகம் காணா நாளில்
காணும் எண்ணத்தில்
இதயம் இதமாய்
இறங்கினாலும் இரவின்
இம்சையால் இமையும்
இன்றே இறந்ததடி ..!
மனதின் குணங்கள்
உறக்கமின்றி ஓடி
உனையே சுற்றுவதால்
உறக்கம் விற்ற ஒருவன்
அசையாமல் திரிகிறான் ..!
- இராஜ்குமார்
நாள் ; 08 - 10 - 2012